தமிழ்நாடு

தமிழகத்துக்கு மேலும் 6.99 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை

12th Jun 2021 06:38 PM

ADVERTISEMENT

தமிழகத்துக்கு மேலும் 6.99 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 98 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து மேலும் 6.99 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு இன்று வந்தடைந்தன. 
சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட உள்ளன. 
தமிழகத்துக்கு இதுவரை சுமாா் 1.06 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஏற்கெனவே இன்று காலை ஹைதராபாதிலிருந்து 1.26 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Covishield vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT