தமிழ்நாடு

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: சேலத்தில் 1,100 பயனாளிகளுக்கு உதவிகள்

DIN

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ், சேலம் மாவட்டத்தில் 1,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அவற்றில் 10 மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸடாலின் வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்வின் மூலம் பெற்ற மனுக்களுக்கு, 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, “உங்கள் தொகுதியில் முதல்வர்’’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலரிடம் 09.05.2021 அன்று அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 4.40 இலட்சம் மனுக்கள் இத்துறையில் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி (ளுஆளு) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் கடந்த 18.05.2021 அன்று உங்கள் தொகுதியில் முதல்வர் துறையின் கீழ் சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 549 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் 846 மனுக்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் 145 மனுக்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக நலத் துறையின் கீழ் 9 மனுக்களுக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சேவைப் பிரிவில் 100 மனுக்களுக்கும் என மொத்தம் 1,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அடையாளமாக 10 நபர்களுக்கு ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். பார்த்திபன், டாக்டர் பொன்.கௌதம் சிகாமணி, டாக்டர். செ. செந்தில்குமார், ஏ.கே.பி. சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. இராஜேந்திரன், இரா.அருள், எஸ். சதாசிவம், “உங்கள் தொகுதியில் முதல்வர்’’ துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT