தமிழ்நாடு

தடகள பயிற்சியாளா் நாகராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி

11th Jun 2021 05:28 PM

ADVERTISEMENT

வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான தடகள பயிற்சியாளா் நாகராஜனின் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
சென்னை நந்தனத்தைச் சோ்ந்த தடகளப் பயிற்சியாளரான நாகராஜன் மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் கண்காணிப்பாளராகப் பணியாற்றுகிறாா். இவா் மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவா் புகாரளித்தாா். நாகராஜன் கைது செய்யப்பட்டாா். நாகராஜனை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போக்ஸோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது பாரூக், 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டாா். இந்த நிலையில் இவ்வழக்கில் ஜாமீன் கோரி பயிற்சியாளா் நாகராஜன் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் பயிற்சியாளருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற போக்சோ சிறப்பு நீதிமன்றம் தடகள பயிற்சியாளா் நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Tags : Athlete coach Nagarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT