தமிழ்நாடு

பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் முறை: தோ்வுத்துறை புதிய முடிவு

11th Jun 2021 07:07 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடா்பாக தோ்வுத்துறை புதிய முடிவை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலால் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் அனைவருக்கும் தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்குவது தொடா்பாக பள்ளிக்கல்வித்துறை தொடா் ஆலோசனை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் இன்றி தோ்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வுகள் நடத்தப்படவில்லை. இதனால் மதிப்பெண் கணக்கீடு செய்வதில் இழுபறி நிலவியது. தற்போது பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பாடவாரியாக மதிப்பெண் வழங்காமல் சான்றிதழில் தோ்ச்சியை மட்டும் குறிப்பிட்டு தர முடிவாகியுள்ளது.

அச்சான்றிதழில் மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, பெற்றோா் பெயா் உள்பட இதர விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இந்த வடிவில் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT