தமிழ்நாடு

ஜூன் 12-ல் திருவாரூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்

8th Jun 2021 09:03 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜூன் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்லவுள்ளார். 

சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை தண்ணீரைத் திறந்துவைத்தப் பிறகு கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 

ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 60 ஆண்டுகள் தாமதமாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் 10 ஆண்டுகள் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேட்டூர் அணை வரலாற்றில் இதுவரை 17 ஆண்டுகள் குறிப்பிட்ட நாளான ஜூன் 12ல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு 18வது ஆண்டாக குறிப்பிட்ட நாளில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : DMK மு.க.ஸ்டாலின் Mettur Dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT