தமிழ்நாடு

முகக் கவசம் உள்ளிட்ட 15 மருத்துவப் பொருள்களுக்கு விலை நிர்ணயம்: தமிழக அரசு

8th Jun 2021 02:36 PM

ADVERTISEMENT


மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 மருத்துவப் பொருள்களுக்கான விலையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை நிர்ணயித்துள்ளது.

மேலும் இந்த 15 மருத்துவப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, என்-95 முகக் கவசத்தை ரூ. 22-க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 3 வெவ்வேறு சர்ஜிகல் முகக் கவசங்களை முறையே ரூ. 3, ரூ. 4, ரூ. 4.50-க்கு விற்க வேண்டும். 200 மில்லி சானிடைசர் ரூ. 110-க்கு விற்பனை செய்ய வேண்டும்.

இதுதவிர, பிபிஇ உடை (1 யூனிட்) - ரூ. 273, பல்ஸ் ஆக்சிமீட்டர் ரூ. 1,500, ஆக்சிஜன் முகக் கவசம் (1 யூனிட்) - ரூ. 54 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 
 

ADVERTISEMENT

Tags : Tamilnadu Government
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT