தமிழ்நாடு

கர்நாடகத்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 40 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

8th Jun 2021 10:03 AM

ADVERTISEMENT

ஓசூர்: கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளதாக காவல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தெரிவித்தார்.

தமிழக கர்நாடக மாநில எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டார் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி மகேஷ்குமார் கூறியதாவது:

கடந்த ஊரடங்கு காலத்தில் கடந்த ஒரு மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி பழங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் மற்றம் கார் இருசக்கர வாகனங்களில் மது கடத்தல் நடைபெற்று வந்தது.

அதனை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனை கடத்தி வந்த 40 கார்கள் மற்றும் 80 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார். பேட்டியின்போது டிஎஸ்பி சங்கர் உடனிருந்தார்.

Tags : ஓசூர் மதுபாட்டில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT