தமிழ்நாடு

11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

8th Jun 2021 07:42 PM

ADVERTISEMENT

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை கூடுதலாக சேர்க்கை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிக விண்ணப்பங்களைப் பெறும் பாடப்பிரிவிற்கு தொடர்புடைய பாடங்களில் இருந்து 50 வினாக்களில் தேர்வுகளை நடத்தலாம் எனவும் அதன்மூலம் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 3ஆம் வாரத்தில் தொலைதொடர்பு முறையில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் எனவும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சிகள் மூலமாகவும், தொலைதொடர்பு  முறையிலும் வகுப்புகளை நடத்த வழிகாட்டப்பட்டுள்ளது.

Tags : education TNGovt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT