தமிழ்நாடு

அனைவருக்கும் கரோனா நிவாரணம் தர உத்தரவிட முடியாது: நீதிமன்றம்

8th Jun 2021 11:51 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழக்குவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விரும்புகிறோம் என கருத்து தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அரசின் கொள்கை முடிவு குறித்த பொதுநல வழக்குகளில் சில விளம்பரத்திற்காக தொடரப்படுகின்றன என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags : coronavirus high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT