தமிழ்நாடு

மன்னார்குடி, கோட்டூரில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

8th Jun 2021 01:24 PM

ADVERTISEMENT

மன்னார்குடி மற்றும் கோட்டூரில் கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கோரிக்கைகள் : கரோனா தடுப்பு மருந்துகள் எண்ணிக்கையை தமிழ்நாட்டிற்கு குறைக்காமல் வழங்கிட வேண்டும். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் (எச்.எல்.எல்.) பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும் அது தொடர்பான சொத்துக்களையும் தமிழக அரசிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு
தரவேண்டிய நிதி பாக்கி தொகை அனைத்தையும் உடனடியாக மாநில அரசுக்கு
வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து பெட்ரோல் விலை ரூ. 50 க்கும், டீசல் விலை ரூ. 40 க்கும் விற்பனை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை  அஞ்சல் நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமையில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது.

இதில், சிபிஐ ஒன்றிய செயலர் ஆர்.வீரமணி, நகரசெயலர் வி.கலைச்செல்வன், இளைஞர் மன்ற மாவட்ட செயலர் துரை. அருள்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பி.பாஸ்கரவள்ளி,மாதர் சங்க ஒன்றிய செயலர் ஆர்.பூபதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று , மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு , சிபிஐ மாவட்டச் செயலரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான வை.சிவபுண்ணியம் தலைமை வகித்தார்.

ஒன்றியச் செயலர் (பொ) எம்.செந்தில்நாதன் ,கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை முருகேசன் , வி தொ ச ஒன்றியச் செயலர் ஜெ.ஜெயராமன் , இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலர் எம் .நல்ல சுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழுக்கம் எழுப்பி ஆர்ப்பாட்பத்தில் ஈடுப்பட்டனர்

Tags : மன்னார்குடி கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT