தமிழ்நாடு

காஞ்சிபுரம்: மணல் சரிந்து இரு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு

8th Jun 2021 10:32 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் மணல் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் தாலுகா பட்டா கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த செல்வேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த கல்குவாரியில் ஜேசிபி ஆப்பரேட்டர் களாக இருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷேர்கான்(39) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த சுனில் சேஷாத்ரி(41) என்ற இருவரும் கல்குவாரியில் ஜேசிபி இயந்திரத்தை பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மண் சரிந்து விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

சுமார் 30 அடி ஆழத்தில் அவர்களது சடலங்கள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்.பி. எம்.சுதாகர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதே பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மணல் சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : காஞ்சிபுரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT