தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பர்கூரில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் 

8th Jun 2021 11:35 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி: பர்கூர் பேருந்து நிலையம் அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கண்ணு தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் சுந்தரேசன், ராயப்பன், திருப்பதி, ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பெட்ரோல், டீசல் விலை விலையை கண்டித்தும், இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப  கரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கெலமங்கலம், ஒசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : கிருஷ்ணகிரி Communist Parties
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT