தமிழ்நாடு

நாகையில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் 

8th Jun 2021 01:09 PM

ADVERTISEMENT

நாகப்பட்டினம்:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மற்றும் கீழ்வேளூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசி உள்ளிட்ட கரோனா தடுப்பு மருந்துகளை மத்தியஅரசு குறைக்காமல் முழுமையாக வழங்கவேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பயோடெக் (எச்எல்எல்) ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும், அது தொடர்பான சொத்துக்களையும் தாமதமின்றி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இழப்பீட்டுத்தொகை உள்பட  தமிழகத்துக்கு  தரவேண்டிய நிதி முழுவதையும் உடனடியாக வழங்கவேண்டும்,

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, முறையே ரூ.50, ரூ. 40 என்ற விலைக்கு விற்பனை செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாகையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரப் பொறுப்பாளர் பி.கே.குணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான வி.சரபோஜி,  மாவட்டப் பொருளாளர் ராமலிங்கம்,சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் ஏ.பி.தமீம் அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 இதேபோல்,கீழ்வேளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.கே. நாகராஜன் தலைமை வகித்தார்.இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நாகை மாவட்டச் செயலாளர் மேகலா, ஏஐடியுசி மாவட்டப் பொருளாளர் வி. எம்.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : நாகப்பட்டினம் ஜி.எஸ்.டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT