தமிழ்நாடு

சென்னை வந்தடைந்தது ஸ்புட்னிக் வி தடுப்பூசி

8th Jun 2021 04:54 PM

ADVERTISEMENT


ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி ஹைதராபாத்திலிருந்து தனியார் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தது.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "தடுப்பூசிகள் அனைத்தும் போக்குவரத்து ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அவை வாகனம் மூலம் பெரியபனிச்சேரியிலுள்ள தனியார் ஆய்வகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர், ஒரு பெட்டி தடுப்பூசிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன" என்றனர்.

அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சினைத் தொடர்ந்து, ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத மத்தியிலிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Tags : Sputnik V
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT