தமிழ்நாடு

தம்மம்பட்டியில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

8th Jun 2021 01:34 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (ஜூன். 8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தம்மம்பட்டி செங்கொடி நகரில் நடந்த ஆர்ப்பாட்த்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ஜீ.வி.நாகராஜ் தலைமை வகித்தார். சிலம்பரசன், கணேஷ் முன்னிலை வகித்தனர்.

மாவட்டக் குழு உறுப்பினர் அருணா ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசினார். இதில், தமிழகத்திலுள்ள அனைத்துக் குடும்த்தினருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை கரோனா நிவாரணம் வழங்க வேண்டும்.

ஜி.எஸ். டி. வரியை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

அனைத்து தொழிலாளர்க ளுக்கும் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மானியக் கடன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags : ஜி.எஸ். டி. சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT