தமிழ்நாடு

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

8th Jun 2021 10:53 AM

ADVERTISEMENT


மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்தக் குழு முதல்வர் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.

இந்தக் குழுவில் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர் இராம. சீனுவாசன், முழு நேர உறுப்பினராகவும் உள்ளார். 

ADVERTISEMENT

மேலும்,  பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்,  மு.தீனபந்து இ.ஆ.ப, (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Chief Minister MK Stalin DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT