தமிழ்நாடு

ராணிப்பேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா பொறுப்பேற்பு

8th Jun 2021 01:31 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா இன்று (ஜூன்8)  பொறுப்பேற்றுக்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ரா.சிவகுமார், வண்டலூர் காவலர் பயிற்சி மையத்துக்கு மாற்றலாகியுள்ள நிலையில்,புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா இன்று (ஜூன்8)  பொறுப்பேற்றுக்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் ரவுடிகள் மீது கவனம் செலுத்தி சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். தற்போது கரோனா பொது முடக்கம் உத்தரவுகளை மீறுவோர்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

அவருக்கு மாவட்ட காவல் துறை சார்பில், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Tags : ராணிப்பேட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT