தமிழ்நாடு

ராணுவ அடக்குமுறைகளால் மியான்மரில் 1 லட்சம் பேர் இடம்பெயர்வு: ஐ,நா.

8th Jun 2021 07:23 PM

ADVERTISEMENT

மியான்மரில் ராணுவத்தின் தாக்குதல்களால் கயா பகுதியில் இருந்து இதுவரை 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியிலிருந்து அகற்றியது. அதுமுதல் அந்நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

மியான்மரில் ராணுவ ஆட்சியால் அதிகரித்துள்ள இடம்பெயரும் பிரச்னை குறித்து ஐ.நா. கவலை கொண்டுள்ளது. ராணுவத்தினருக்கும் ஆயுதம் ஏந்திய போராளிகளின் குழுவினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அப்பாவி மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அவை, பொதுமக்களுக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறையினால் கயா மாநிலத்தில் இருந்து இதுவரை 1 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

"வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான செயல்களால் மக்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு வருகின்றனர்” என ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

மியான்மரில் இதுவரை ராணுவத்தாக்குதல்களால் 840 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Myanmar Military coup
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT