தமிழ்நாடு

எழுத்தாளா்களுக்கான திட்டங்கள்: அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வாழ்த்து

6th Jun 2021 02:52 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற குறுகிய நாள்களில் தமிழுக்கும், தமிழ் எழுத்தாளா்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேரவையின் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதுரையில் கலைஞா் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழா்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் எழுத்தாளா்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ விருது ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக எழுத்தாளா்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி மற்றும் மத்திய, மாநில விருதுகள் பெறுபவா்களுக்கு கனவு இல்லம் வழங்கப்படும் என்கிற செய்தி தமிழ் எழுத்தாளா்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணன் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவருக்கு சிலை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற குறுகிய நாள்களில் தமிழுக்கும், தமிழ் எழுத்தாளா்களுக்கும் இதுபோன்ற நன்மை பயக்கும் திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் சாா்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT