தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: கரோனாவில் பாதித்தவர்களுக்கு ரோட்டரி சங்கத்தினர் உதவி வழங்கல்

6th Jun 2021 05:45 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத்தினர் சார்பில் கரோனா தொற்றில் பாதிப்படைந்தவர்களுக்கு பொருள் உதவி வழங்கினர்.

கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத் தலைவரும், கல்வியாளருமான வி.எஸ்.வெங்கடேசன் ஏற்பாட்டின்படி கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு தேவையான பொருள்களை வழங்கினர். கரோனா ஊரடங்கால் எளிமையாக அதற்கான நிகழ்வு நடைபெற்றது.

கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்விற்கு ரோட்டரி சங்கத் தலைவர் வி.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கச் செயலாளர் ஜெ.சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஏ.சண்முகம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய ரோட்டரி சங்க பையை, கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவர் சுரேஷ்குமாரிடம், ரோட்டரி சங்கத் தலைவர் வி.எஸ்.வெங்கடேசன் வழங்கினார். நிகழ்வில் துணைத் தலைவர் கோஸ்.அன்வர்தீன், துணைச் செயலாளர் ஆர்.சேகர், வர்த்தக சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் எஸ்.அய்யப்பன், எஸ். அகிலாண்டேஸ்வரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

ADVERTISEMENT

Tags : திருவாரூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT