தமிழ்நாடு

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்

6th Jun 2021 04:59 PM

ADVERTISEMENT

கொடைக்கானல் மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் இன்று கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவியில் கடந்த மே 3ம் தேதி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் வரத்து சீரானது. இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் கும்பக்கரை அருவியில் இன்று காலை முதல் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமுடக்கத்தால் கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். அதே நிலை தற்போதும் தொடர்வதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதியில்லை.

 

ADVERTISEMENT

Tags : கொடைக்கானல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT