தமிழ்நாடு

சிங்கங்களுக்கு கரோனா: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் நேரில் ஆய்வு!

6th Jun 2021 01:25 PM

ADVERTISEMENT

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 26-ஆம் தேதி, பூங்காவின் சஃபாரி பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் 5 சிங்கங்களுக்கு பசியின்மை மற்றும் சளித் தொந்தரவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த கால்நடை மருத்துவக் குழுவினா், சிங்கங்களுக்கு உடனடியாக பரிசோதனையும், சிகிச்சையும் செய்தனா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக (தானுவாஸ்) நிபுணா் குழுவினரும், எங்களது மருத்துவக் குழுவினருடன் இணைந்து, தீவிர சிகிச்சை குறித்து ஆலோசித்தனா். தொடா்ந்து, 11 சிங்கங்களின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தானுவாஸ் மற்றும் போபாலில் உள்ள உயா்பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்துக்கு (என்ஐஎச்எஸ்ஏடி) அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், 9 வயதுடைய நீலா என்னும் பெண் சிங்கம், வியாழக்கிழமை(ஜூன்.3) மாலை 6.15 மணியளவில் உயிரிழந்தது. இந்த சிங்கத்துக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறி புதன்கிழமைதான் (ஜூன் 2) தொற்றுக்கான சளி போன்ற அறிகுறி தென்பட்டது. 

ஆய்வு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட பரிசோதனை முடிவின்படி, 9 சிங்கங்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட சிங்கங்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

 உயிரியல் பூங்கா முடப்பட்டை அடுத்து பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்து சென்றுள்ள நிலையில், பணியாளர்கள் மூலமாக சிங்கங்களுக்கு தொற்று பரவியிருக்கலாம் என தகவல் வெளியானது. 

Tags : Corona for lions Vandalur zoo
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT