தமிழ்நாடு

தமிழகத்தில் 847 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

6th Jun 2021 01:30 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனா இரண்டாம் அலையைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து ஆராய ஒரு சிறப்பு நிபுணர் குழுவையும் தமிழக அரசு நியமித்து அந்த குழுவும் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தேவை அதிகரித்துள்ளதாக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோய்க்காக மத்திய அரசிடம் இருந்து இதுவரை 2,470 ஆம்போடெரிசின் பி மருந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : கருப்பு பூஞ்சை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT