தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு 'அமெரிக்க வாழ் கம்மவார் சங்கத்தினர்' முகக்கவசம், போர்வைகள் வழங்கல்

6th Jun 2021 03:32 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு 'அமெரிக்கவாழ் கம்மவார் சங்கத்தினர்' முகக்கவசம், போர்வைகள் வழங்கினர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு, அமெரிக்காவை சேர்ந்த 'வட அமெரிக்கா கம்மவார் சங்கம்' என்ற தன்னார்வ தொண்டு  அமைப்பு பலவிதமான மருத்துவ உதவிகளை செய்து வருகிறது. 

புலம்பெயர்ந்து வந்தாலும் பிறந்த மண்ணுக்கும் வளர்ந்த நாட்டுக்கும் பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்தாலும், தொற்று நோயால் நாடே ஸ்தம்பித்து போன இந்த இக்கட்டான நிலையில், இந்த அமைப்பை சேர்ந்த பல உறுப்பினர்கள் தங்களால் முடிந்த நிதியுதவியும் அளித்து தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் நிதி சேகரித்து பல ஊரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக்கவசம், போர்வைகள் வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 10 ஆயிரம் அறுவை சிகிச்சை முகக்கவசம், 500 N95 முகக்கவசம், 500 படுக்கை விரிப்புகள், 500 தலையணை உறைகள் ஆகிய பொருட்களை தலைமை மருத்துவர் டாக்டர் காளிராஜிடம் வழங்கினர்.

ADVERTISEMENT

குறிப்பாக மாவட்டத்தில் இதுவரை ரூபாய் 2.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொடுத்து உதவியதோடில்லாமல், வரும் வாரத்தில் தேனி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கும் ஈரோட்டிலிலுள்ள 10 ஆரம்ப  சுகாதார நிலையங்களுக்கும் திண்டுக்கல்லிலுள்ள 4 ஆரம்ப  சுகாதார நிலையங்களுக்கும், ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கவும், கூடுதலாக 100 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கவும் 'வட அமெரிக்கா கம்மவார் சங்கம்' திட்டமிட்டுள்ளது.

Tags : ஸ்ரீவில்லிபுத்தூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT