தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

6th Jun 2021 11:30 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழக காவல்துறையில் மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 26 காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவின்படி, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக ஆர்.பொன்னி நியமனமிக்கப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காவல் கண்காணிப்பாளராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக கிங்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமை தலைமையக ஏ.ஐ.ஜி.யாக எம்.துறை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளராக பெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சண்முகப்பிரியா  சென்னையில் செயல்படக்கூடிய சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளராக சுஜித்குமார், மனித உரிமைகள் ஆணையத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நுண்ணறிவு பிரிவினுடைய மதுவிலக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளராக அசோக்குமாரும், குற்றப்புலனாய்வு மதுரை மண்டலா பிரிவு காவல் கண்காணிப்பாளராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சத்தி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக அதிவீர ராம பாண்டியனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவலர் நலப்பிரிவு உதவி ஐ.ஜி.யாக ஜி.சம்பத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Tamil nadu 26 IPS officers transferred
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT