தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள்? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

4th Jun 2021 08:37 AM

ADVERTISEMENTசென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை(ஜூன்.4) ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு குறையாதை அடுத்து பின்னர் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

ADVERTISEMENT

இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு பின்னர் ஊரடங்கில் மீண்டும் தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Tags : Lockdown relaxation Lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT