தமிழ்நாடு

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை: முதல்வர் தொடக்கிவைத்தார்

2nd Jun 2021 01:00 PM

ADVERTISEMENT

ஓய்வு பெற்ற  போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான  நிலுவைத் தொகையை வழங்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலக்கட்டங்களில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியினை 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து இதன் அடையாளமாக 6 ஓய்வு பெற்ற போக்குவரத்துக் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானயத் கட்டாரியா, இ.ஆ.ப, முதன்மை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT