தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, தங்கநாணயம் பரிசு

2nd Jun 2021 09:48 AM

ADVERTISEMENT


கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பொது மக்களை ஊக்கப்படுத்தும் வகையில்,  கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்கநாணயம் பரிசு வழங்கப்படும் என சென்னை கோவளம் இளைஞர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை கோவளம் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க, ஊராட்சி அமைப்பினர் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், கிராம மக்கள் கரோனா தடுப்பூ போடுவதில் ஆா்வம் காட்டவில்லையாம்.

இதன்பிறகு ஒரு மாற்று யோசனை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தோன்றியது. இதன்படி, "கரோனா இல்லாத கோவளம்" என்ற பெயரில் புதிய முயற்சியாக, கரோனா தடுப்பூசி போடும்  கோவளம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பிரியாணி, குலக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்கநாணயம் போன்ற பரிசுப்பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர். 

ஊராட்சி அமைப்புடன் இணைந்து தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களின் புதிய முயற்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT