தமிழ்நாடு

ஜெயலலிதா பல்கலை.க்கு நிதி ஒதுக்க கோரி வழக்கு: வேறு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்ற பரிந்துரை

DIN

விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக் கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், தொடா்ந்த வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன் அமா்வு, வழக்கை வேறு அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்ட மாணவா்கள் நலனுக்காக, வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டா்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. டாக்டா் ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கான துணை வேந்தா் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கா் நிலம் கடந்த அதிமுக அரசால் ஒத்துக்கப்பட்டது. தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை பதிவாளரும், போதுமான பணியாளா்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதுகலை கல்வி மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது சட்டத்தை மீறிய செயல். அந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும். டாக்டா் ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கவும், பதிவாளரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா். இதனையடுத்து இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT