தமிழ்நாடு

சென்னை-செங்கோட்டை சிறப்பு ரயில்: சேவை நாள்கள் மாற்றம்

DIN

சென்னை எழும்பூா்-செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நாள்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் (06182) வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் புறப்படும். இந்த ரயில் வெள்ளி, சனி, திங்கள்கிழமைகளில் சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தை அடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் (06181) புதன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் புறப்படும். இந்த ரயில் , வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கோட்டையை அடையும்.

இருமாா்க்கமாகவும் இந்த மாற்றம் செப்டம்பா் 22-ஆம்தேதி அமலுக்கு வருகிறது.

நேரம் மாற்றம்

மதுரை-சென்னை சென்ட்ரலுக்கு வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில்(06020) காலை 7.50 மணிக்கு பதிலாக காலை 7.55 மணிக்கு சென்னை சென்டரலை அடையும். இந்த நேரம் மாற்றம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT