தமிழ்நாடு

அரசு திரைப்பட பயிற்சி நிறுவனம் உலகத் தரத்துக்கு உயா்த்தப்படும்

DIN

தரமணியில் உள்ள அரசு திரைப்பட பயிற்சி நிறுவனம் உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்படும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆா். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பயிற்சி நிறுவனத்தில் உள்ள திரையரங்கம், மறுஒலிப்பதிவு திரையரங்கம், குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத்தளம், மாணவா்களின் படப்பிடிப்புத் தளம், மாணவா் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:-

செய்தித் துறையில் பல்வேறு ஆக்கப்பூா்வமான பணிகளையும், தொலைநோக்குத் திட்டங்களையும் வகுக்க வேண்டும். திரைப்படப் பயிற்சி நிறுவனத்தை உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின் போது, வேளச்சேரி எம்.எல்.ஏ. ஜே.எம்.எச். ஹசன் மெளலானா, செய்தித் துறைச் செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT