தமிழ்நாடு

நியாயவிலைக் கடை குறைபாடுகளுக்கு பணியாளர்கள் காரணம் அல்ல: கு.பாலசுப்பிரமணியன்

DIN

சிதம்பரம்: நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடுகளுக்கு அந்த கடை பணியாளர்கள் காரணம் அல்ல. அவர்களுக்கு பொருள்களை வழங்குபவர்களும், ஊதியத்தை வழங்குபவர்களும், சரியான எடையில் பொருள்களை வழங்காத நிர்வாகம்தான் அந்த குறைபாடுகளுக்கு காரணம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் குறைக்கப்படுவதாக வதந்திகள் பரவி வருகிறது. அதுகுறித்து எந்த உத்தரவும் வரவில்லை. ஆனால், சுமார் 3 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழ்நிலையில் 59, 60 என கடந்த ஆட்சியில் ஓய்வுபெறும் வயதாக ஆக்கப்பட்டது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட சூழ்நிலை இருந்தால், வயது வரம்பை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. லட்சக்கணக்கில் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது 59, 60 என உயர்த்தப்பட்ட அந்த உயர்வை மீண்டும் 58 ஆக குறைப்பதில் அர்த்தமில்லை. அடுத்து ஓய்வுபெறும்போது பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களை பத்திரங்களாக அளிக்கப்போவதாக வதந்தியும் பரவுகிறது. ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனுக்குடன் அளித்து வந்தால்தான் அவர்களது வாழ்க்கையில் நிம்மதியான சூழல் உருவாகும். எனவே, இதனை தமிழகஅரசு செய்யாது என எதிர்பார்க்கிறோம். 

நியாயவிலைக் கடைகளை பொருத்தவரையில் அனைத்து கடை பணியாளர்களையும் மூன்றாண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

அதேநேரத்தில் நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடுகளுக்கு அந்த கடை பணியாளர்கள் காரணம் அல்ல. அவர்களுக்கு பொருள்களை வழங்குபவர்களும், ஊதியத்தை வழங்குபவர்களும், சரியான எடையில் பொருள்களை வழங்காத நிர்வாகம்தான் அந்த குறைபாடுகளுக்கு காரணம்.

ஆதலால் நியாயவிலைக்கடைகளுக்கு மேல் உள்ள அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை மாற்றிவிட்டு, நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும். வெளியாட்களை வைத்து நியாயவிலைக்கடைகளில் பணியாற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஊதியம் குறித்து அரசிடம் கேட்டால் அவர்கள் அரசு பணியாளர்கள் அல்ல என கூறுகின்றனர்.

நியாயவிலைக்கடைகளில் ஒரே பணியாளர் 3 அல்லது 4 கடைகளை பார்த்து பணியாற்றி வரும் சூழல் உள்ளது.  ஏறத்தாழ 5 ஆயிரம் விற்பனையாளர்கள், 8 ஆயிரம் எடையாளர்கள் பணியிடம் காலியாக உள்ள சூழ்நிலையில் வெளியாட்களை வைத்து வேலை வாங்கக்கூடாது எனக்கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு அரசு சரியான எடையில் பொருள்களை வழங்க வேண்டும். பொருள்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்பதை அரசு செய்துவிட்டால் நியாயவிலைக்கடை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுவர்கள்.

எனவே தமிழகஅரசு உடனடியாத தலையிட்டு காலியாக உள்ள நியாயவிலைக்கடை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு உடனடியாக எடையாளர் பணி நியமிக்க வேண்டும் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். அப்போது நியாயவிலைக்கடை பணியாளர் சங்க பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

தூத்துக்குடி: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

SCROLL FOR NEXT