தமிழ்நாடு

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினம்: ரத்ததானம் செய்து மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இளைஞர்கள்

30th Jul 2021 03:50 PM

ADVERTISEMENT

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியகுளம் விழுதுகள் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் செய்து, மருத்துவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினத்தையடுத்து விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தானம் செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ஆசியா கலந்துகொண்டு விழுதுகள் இளைஞர் மன்றத்திற்கு ரத்ததான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் விழுதுகள் இளைஞர் மன்ற துணைச் செயலாளர் அஜீத் பாண்டி, நிர்வாகிகள் தனலெட்சுமி, குமார், தமிழரசன் மற்றும் ரத்த வங்கி செவிலியர்கள் ஹேமலதா, மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மருத்துவர் ராம்குமார் வாழ்த்துகளை தெரிவித்தார். 

இதையும் படிக்ககிருஷ்ணகிரியில் புதிய மின் இணைப்பிற்கு லஞ்சம்: மின்வாரிய செயற்பொறியாளர் கைது

ADVERTISEMENT

Tags : blood donation ரத்த தானம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT