தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

DIN

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

நடிகை ஒருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக கூறி, முன்னாள் அமைச்சா் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் மணிகண்டன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பபட்டது. 

தன்னிடம் நடிகை பணம் பறிக்க முயன்றதாகவும், அது முடியாததால் பொய் புகார் அளித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிகண்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

மேலும் இதுதொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், நடிகை சாந்தினி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT