தமிழ்நாடு

பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஆடி 18 விழா ரத்து? அறிவிப்பு வெளியிடாததால் பக்தர்கள் குழப்பம்

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் ஆடி 18 விழா குறித்து, கோயில் நிர்வாகம் வாயிலாக எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வசிஷ்டநதி, புனிநதியாக கருதப்படுகிறது. இந்நதிக்கரையில் பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமான பிரசித்தி பெற்ற  பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 2000 ஆண்டுகள் பழமையானதாக போற்றப்படும் இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி பதினெட்டு தினங்களில் நடைபெறும் சிறப்பு பூஜை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி 18 சிறப்பு பூஜை வழிபாட்டில், அதிகாலை முதல் இரவு வரை, சேலம் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலூர், கடலுார் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு தரிசனம் செய்து வந்தனர். 

இந்நிலையில்,கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவல் பொதுமுடக்கத்தால் ஆடி 18 சிறப்பு பூஜை வழிபாடு ரத்து செய்யப்பட்டது.
நிகழாண்டும் கரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதால், சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான கோயில்களில் ஆடி 18 சிறப்பு பூஜை விழா மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஆடி 18 சிறப்பு பூஜை விழா நடைபெறுமா? பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா?  விழா ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து கோயில் நிர்வாகம் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

எனவே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஆடி 18 சிறப்பு பூஜை விழா மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுமா? அல்லது விழா ரத்து செய்யப்படுகிறதா? என்பது குறித்து கோயில் செயல் அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் விரைவில் அறிக்கை வெளியிட வேண்டுமென  பக்தர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பரவல் முடிவுக்கு வராத நிலையில், பேளூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவதை தவிர்க்க, ஆடி 18 தினத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதை தவிர்க்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT