தமிழ்நாடு

அவிநாசி: அதிமுக விவசாய பிரிவு சார்பில் 250 பேருக்கு நிவாரண பொருள்

30th Jul 2021 01:30 PM

ADVERTISEMENT

 

அவிநாசி:  அவிநாசி காமராஜர் நகரில் அதிமுக விவசாய பிரிவு சார்பில் 250 நபர்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருள்களை  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சீத்தலட்சுமி ஆனந்தகுமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் எம்.ஆனந்தகுமார் தலைமை வகித்தார். அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அ.ஜெகதீசன், மு. சுப்ரமணியம், நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சீத்தலட்சுமி ஆனந்தகுமார் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை 250 நபர்களுக்கு வழங்கினார். 
பொறுப்பாளர்கள் எம். எஸ்.மூர்த்தி, கார்த்திக் ராஜா, தம்பி ராஜேந்திரன், ஹரிஹரன், துரை பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

Tags : Avinashi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT