தமிழ்நாடு

27 சதவீத இட ஒதுக்கீடு: அதிமுக சட்டப்போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி

30th Jul 2021 08:25 PM

ADVERTISEMENT

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 சதவீத ஓபிசி ஒதுக்கீடு அதிமுகவின் சட்டப்போராட்டத்துக்குக் கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனசாமி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 27 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு முதலே (2021-22) அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறோம். மத்திய அரசு, மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதியாக நின்று அமுல்படுத்திய பிரதமருக்கு தமிழ் நாட்டு மக்களின் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதையும் படிக்கலாமே பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப் போராட்டத்தால், அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமையும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்ற இலக்கினை அடைவதற்கான முயற்சிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வெற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கழகத்தினால் தொடர்ந்து பின்பற்றி வரும் சமூக நீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். 

Tags : ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT