தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் மேலும் 1,947 போ் பாதிப்பு

30th Jul 2021 08:53 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று மேலும் 1,947 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,947 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக கோவையில் 230 பேருக்கும், சென்னையில் 215 பேருக்கும், ஈரோட்டில் 171 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 57,611-ஆக அதிகரித்துள்ளது. இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து இன்று 2,193 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.02 லட்சத்தைக் கடந்துள்ளது. 

இதையும் படிக்கலாமே பொதுமுடக்கம் நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் இல்லை

ADVERTISEMENT

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 20,934 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,050-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 1,56,843 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT