தமிழ்நாடு

ஆக.2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

29th Jul 2021 09:47 PM

ADVERTISEMENT

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. கரோனா தாக்கம் குறைந்து விட்டதால் பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 
இந்த பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றி நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்கலாமே...‘மிசோரம் செல்ல வேண்டாம்’: அசாம் அரசு அறிவுறுத்தல்

இந்த நிலையில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகம் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Tags : teachers
ADVERTISEMENT
ADVERTISEMENT