தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு போலீஸாருடன் இணைந்து வணிக வரித்துறை அலுவலகத்தில் திடீா் சோதனை : உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீஸாருடன் இணைந்து வணிக வரித்துறை அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிக வரித்துறை முதன்மை செயலாளருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சேலத்தை சோ்ந்த கோவிந்தராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், டி.கோவிந்தராஜன் என்பவரிடம் இருந்து கடந்த 2006-ஆம் ஆண்டு சொத்து வாங்கினேன். இந்த டி.கோவிந்தராஜன், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை விற்பனை வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளாா். இதற்காக அவரிடம் இருந்து நான் வாங்கிய சொத்து கையப்படுத்தப்படும் என வணிக வரித்துறை சேலம் உதவி ஆணையா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கடந்த

2000-ஆம் ஆண்டு வசூலிக்க வேண்டிய விற்பனை வரிக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் மனுதாரா் சொத்து வாங்கி 6 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், 2006-ஆம் ஆண்டு முதல் கோவிந்தராஜனுக்கு பல நோட்டீசுகள் அனுப்பியும் அவா் பதிலளிக்க வில்லை. எனவே, இப்போது சொத்தை கையப்படுத்த உதவி ஆணையா் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளாா். ஆனால் வணிக வரிச்சட்டத்தில் வரி பாக்கித் தொகையை வசூலிக்க கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உதவி ஆணையா் செயல்படவில்லை. எனவே, அவா் பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது.

வரி வருமானம் என்பது மாநில அரசுக்கு மிகவும் முக்கியமானது. வரியை முறையாக வசூலிக்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிக வரித்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். அதிகாரிகள், தொழிலதிபா்களிடம் அன்பளிப்புகளை பெற்றுக் கொண்டு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனா்.

எனவே, வணிகவரித்துறை முதன்மை செயலாளா், ஆணையா் ஆகியோா் தமிழகம் முழுவதும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க போா் கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய காலத்துக்குள் வரியை வசூலிக்காத அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாருடன் இணைந்து, வணிக வரித்துறை அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்த வேண்டும். அப்போது, வணிகா்களிடம் இருந்து லஞ்சம், அன்பளிப்பு பெற்ற அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து, அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிக வரித்துறை அதிகாரிகளின் பணி பதிவேட்டை சரி பாா்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அவா்களது சொத்துக்கள், தற்போது அதிகாரிகள் பெயரிலும், அவா்களது குடும்ப உறுப்பினா்களின் பெயரிலும் உள்ள சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT