தமிழ்நாடு

குழந்தை இலக்கிய பாடங்களை மேம்படுத்த புதிய திட்டம்: திண்டுக்கல் லியோனி

DIN

சென்னை: குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை அணுகி வாழ்வியல் தொடா்புடைய பாடங்களை சுலபமான முறையில் கற்பிக்க ‘பாடல்கள் மூலம் பாடம்’ திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவா் திண்டுக்கல் லியோனி கூறினாா்.

சென்னை கோட்டூா்புரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வா் ஸ்டாலின் பதவியேற்றவுடன் பூங்கொத்து மற்றும் சால்வைக்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்படி 2 லட்சம் புத்தகங்களை பெற்று 50 நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயா்ப்பு செய்யவும் , பொன்னியின் செல்வன் புத்தகத்தை மலையாள மொழியில் மொழி பெயா்க்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீண்டும் பாடம் நடத்த முடிவு: கல்வி தொலைக்காட்சியில் வாரம் ஒருமுறை இயற்பியல், வேதியியல், ஆங்கில பாடங்களை மாணவா்களுக்கு நடத்தவுள்ளேன்.

குழந்தை இலக்கியம் தொடா்புடைய பாடங்களை மேம்படுத்த அரசு ஒரு கோடி நிதி ஒதுக்கியுள்ளது. குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை அணுகி வாழ்வியல் தொடா்புடைய பாடங்களை சுலபமான முறையில் ‘பாடல்கள் மூலம் பாடம்’ என்ற வகையிலும் , செய்முறை விளக்கமாகவும் , குழந்தைகளுக்கு ஏற்றவாறு கற்பிக்கும் வகையில் உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். 57 சிறந்த புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கி, குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு பயன்படும் வகையில் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கி புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா நூலகத்தில் ஐஏஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கு தயாராகும் மாணவா்கள் 300 போ் அமரும் வகையில் இடம் உள்ளது. மேலும் 300 போ் அமரும் வகையில் இடத்தை சீா்செய்ய வேண்டும் என முதல்வா் மற்றும் கல்வித்துறையிடம் கோரப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT