தமிழ்நாடு

5 ஆண்டுகளில் புதிய மின்உற்பத்தியைப் பெருக்க வேண்டும்: அமைச்சர் ஏ செந்தில்பாலாஜி 

29th Jul 2021 08:41 PM

ADVERTISEMENT

5 ஆண்டுகளில் புதிய மின்உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஏ செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஏ செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

தமிழகத்தில் மீண்டும் அதிகரிப்பு? புதிதாக 1,859 பேருக்கு கரோனா

அப்போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் நற்பெயரை ஏற்படுத்தும் துறையாக நாம் விளங்கவேண்டும். பொதுமக்களின் புகார்களின் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.மேலும் வரும் புகார்கள் உங்கள் பகுதி அல்லாதவையாக இருப்பின் சம்மந்தப்பட்ட பகுதி அலுவலுருடன் அதனைப் பகிர்ந்து தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
மேலும் செய்தித்தாள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் மின்சாரம் தொடர்பான எந்தக் குறையாக இருந்தாலும் அந்தக் குறை குறித்தும் அதனை நிவர்த்தி செய்ததற்கான தகவலைக் குறித்தும் உடனடியாகத் தனக்குத் தகவல் அனுப்ப வேண்டுமென்று உத்தரவிட்டார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகப் புகார் மையத்தில் பெறப்பட்ட மின்புகார்கள் குறித்தும் அப்பகுதி பிரிவு அலுவலர் துரித நடவடிக்கை எடுப்பது குறித்தும் அப்பகுதிகளில் மின் தடங்கல் ஏற்படுவதற்கான காரணம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 

மருத்துவ படிப்புகளில் மத்திய அரசு இடஒதுக்கீடு அறிவித்தது ஆறுதல் தருவதாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த 5 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெறக் கூடிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும், 5 ஆண்டுகளில் புதிய மின்உற்பத்தியைப் பெருக்கவேண்டும், மின்விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், எந்த பிரச்னைகளும் வராமல் திட்டம் வகுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் 5 ஆண்டிற்கான திட்டத்தை ஒரு வாரத்தில் அளிக்கவேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

Tags : Minister Senthil Balaji
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT