தமிழ்நாடு

கரூர் அருகே கதண்டு வண்டு கடித்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

29th Jul 2021 04:19 PM

ADVERTISEMENT

கரூர் அருகே கதண்டு வண்டு கடித்து மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கரூர் அருகே செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் 50க்கும் மேற்பட்டோர் செட்டிபாளையம் அணை பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அணைப்பகுதி அருகே உள்ள வேப்ப மரத்தில் ராட்சச கூடுகட்டிருந்த கதண்டு வண்டு 500க்கும் மேற்பட்டவை திடீரென்று பறந்து வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை கடித்துள்ளது. இதனால், அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இந்த நிலையில், செட்டிபாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறாளியான கார்த்திக் (47) என்பவர் விரைந்து ஓட முடியாததால் அவரை விஷ வண்டு கடுமையாக கடித்துள்ளது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் கார்த்தி மற்றும் 20க்கும் மேற்பட்ட மக்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

மயக்க நிலையில் சென்ற கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 10க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் என மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நூறு நாள் வேலைக்குச் சென்றபோது ஏற்பட்ட விபரீதத்தால் கிராம மக்கள் சோகமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT