தமிழ்நாடு

கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

29th Jul 2021 01:56 PM

ADVERTISEMENT

கோவை, நீலகிரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்றும் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் படிக்க | அத்துமீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை: மக்களவைத் தலைவர் எச்சரிக்கை

ADVERTISEMENT

ஜூலை 31இல் கோவை, நீலகிரி, தென் கடலோர மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | நாடாளுமன்றத்தில் 8வது நாளாக அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

வடக்கு வங்கக்கடல், தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் காற்றும் வேகமாக வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT