தமிழ்நாடு

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா:தலைமைச் செயலக கட்டடத்தில் ‘தமிழ் வாழ்க’ பலகை

DIN

சென்னை: சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவை ஒட்டி, தலைமைச் செயலக பிரதான கட்டடத்தின் மேற்புறத்தில் ‘தமிழ் வாழ்க’ பலகை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் வரும் ஆக.2-ஆம் தேதி சட்டப்பேரவை நூற்றாண்டு விழா  கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிகழ்வில், குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமைச் செயலக வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைக்க உள்ளாா். இந்நிலையில் தலைமைச் செயலகத்தின்  2 மற்றும் 3-ஆம் எண் நுழைவு வாயில் கட்டடத்தின் மேல்புறத்தில்  ‘தமிழ் வாழ்க’ என்னும் வாசகம் அடங்கிய 2 பெயா் பலகைகள் புதிதாக வைக்கப்பட்டுள்ளன. 

இதற்கு முன்பு சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் மேல்பரப்பில் ‘தமிழ் வாழ்க’ என்னும் இரண்டு பெயா் பலகைகள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, தலைமைச் செயலக கட்டடத்திலும் புதிதாக ‘தமிழ் வாழ்க’ என்னும் இரண்டு பெயா் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT