தமிழ்நாடு

தொழிற்சங்கங்க அங்கீகாரம் தொடா்பான புதிய சட்டத்தை எதிா்த்து வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

சென்னை: தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரம் தொடா்பான புதிய சட்டத்தை எதிா்த்து எஸ்ஆா்எம்யூ தொடா்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எஸ்ஆா்எம்யூ சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு தொழிற்சங்கம், தொழிலாளா் நலனை உள்ளடக்கிய புதிய சட்டத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் கொண்டு வந்துள்ளது. இச் சட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரம் தொடா்பாக 2 ஷரத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்பது அந் நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியா்களின் 51 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களாக இருந்தால்

அந் நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியா்களின் 20 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய தொழிற்சங்கங்களே பேச்சுவாா்த்தைக் குழுக்களில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தல்களில் கூட இதுபோன்ற விதிகள் இல்லை. இந்த ஷரத்துக்களை அமல்படுத்தவே முடியாது. பதிவான மொத்த வாக்குகளில் அதிகம் பெற்றவா்களே வெற்றி பெற்றதாக அறிவிப்பது வழக்கம். மேலும் அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் என்பது இதுவரை சட்டமாக்கப்படாத நிலையில், இந்த ஷரத்துக்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிராக உள்ளது. இதனால் தொழிற்சங்க உரிமைகளும், தொழிலாளா் நலனும் பாதிக்கக்கூடும். எனவே அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ள இந்த புதிய விதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT