தமிழ்நாடு

தரங்கம்பாடி: திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் 

28th Jul 2021 11:59 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பூம்புகார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் தலைமையில் செம்பனார்கோவில் கடைவீதியில்   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் மக்களை ஏமாற்றி, தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்வோம், குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகை வழங்குவோம், தடையில்லாத மின்சாரம் வழங்குவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்தும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT

இதேபோல் காளகஸ்தினாதபுரம் ஊராட்சியில் செம்பை வடக்கு ஒன்றியசெயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

Tags : DMK ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT