தமிழ்நாடு

சங்ககிரியில் அதிமுக எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் 

28th Jul 2021 12:56 PM

ADVERTISEMENT


சங்ககிரி:  திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் மாவட்டம், சங்ககிரி அதிமுக சார்பில் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சங்ககிரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்து திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது போல் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், நகை கடனை தள்ளுபடி  செய்ய வேண்டும், மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 

மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம், சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலர் ரத்தினம், துணைச் செயலர் மருதாஜலம், தகவல்தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகி பிரசாந்த், மகளிரணி நிர்வாகிகள் மங்கையர்கரசி, பெர்சியா, முன்னாள் நகரச்செயலர் ஆர்.செல்லப்பன் நிர்வாகிகள் என்.கதிரவன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags : ADMK protests against DMK government
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT