தமிழ்நாடு

10 லட்சம் ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக சங்கரய்யா அறிவிப்பு

28th Jul 2021 02:15 PM

ADVERTISEMENT

தமிழக அரசு வழங்கும் 10 லட்சம் ரூபாயை கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கே வழங்குவதாக என். சங்கரய்யா அறிவித்துள்ளார். 

தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தமிழக அரசு 'தகைசால் தமிழர்' என்ற விருது அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க: சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது

ADVERTISEMENT

அதன்படி, விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என். சங்கரய்யாவுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் 10 லட்சம் ரூபாயை கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கே வழங்குவதாக என். சங்கரய்யா அறிவித்துள்ளார். 

 

 

Tags : N. Sankaraiah என். சங்கரய்யா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT