தமிழ்நாடு

ஓபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு

28th Jul 2021 12:29 PM

ADVERTISEMENT

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு  உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தேனி மாவட்டம்  போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வெற்றி பெற்ற அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி வி.பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தன. பன்னீர் செல்வத்துக்கு எதிரான வழக்கில், சொத்து மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளதாக கூறுவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் மிலானி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ADVERTISEMENT

மேலும்,  உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வைப்புத் தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் எம்.எல்.ரவிக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : OPS Udayanidhi Stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT